Skip links

Strengthening Awareness and Action on Malaiyaha Land Rights: Kalutara District Program”

Among the many challenges faced by the Malaiyaha (Plantation) community, the land issue remains the most critical. To date, no government that has come into power has taken effective steps to provide a sustainable and just solution to this long-standing land problem. Even the current government appears to lack a clear and comprehensive policy framework to address this issue.
In this context, as part of a series of district-level programs aimed at raising awareness among the Malaiyaha people and engaging them in dialogue on future actions, the second program of this series was held on 11 January 2026 at a private hotel in Matugama, Kalutara District.
During the discussion, participants engaged in in-depth conversations on what the Malaiyaha people think about their land and housing rights. Special attention was given to the specific land-related issues faced by the Malaiyaha community in the Kalutara District. Furthermore, discussions were held on the future actions that need to be taken at both district and national levels.
Leaders from plantation communities belonging to the Matugama and Palindanuwara Divisional Secretariat divisions actively participated in this discussion. At the conclusion of the meeting, an action plan for the next two months was also developed.
The program was facilitated and guided by Anthony Jesudasan, Executive Director of the Voice of the Plantation People Organization (VOPP), Lavina Hasanthi, Program Director, Francis Rajan, National Program Coordinator, and K. Yogasuji, Kalutara District Coordinator..
මලෛයහම් ජනතාව මුහුණ දෙන ගැටලු අතර ප්රධානතම ගැටලුව වන්නේ ඉඩම් ගැටලුවයි. අද දක්වා බලයට පැමිණි කිසිදු ආණ්ඩුවක් මෙම ජනතාවගේ ඉඩම් ගැටලුව විසඳීම සඳහා තිරසාර සහ සාධාරණ විසඳුමක් ලබා දීමට කටයුතු කර නොමැත. වර්තමාන රජයද මේ සම්බන්ධයෙන් පැහැදිලි සහ කාර්යක්ෂම වැඩපිළිවෙලක් ගෙන ඇති බවක් නොපෙනේ.
මෙම පසුබිම තුළ, මලෛයහම් ජනතාවගේ ඉඩම් ගැටලුව පිළිබඳව ජනතාව දැනුවත් කිරීමත්, ඉදිරි ක්රියාමාර්ග පිළිබඳව ඔවුන් සමඟ සංවාද කිරීමත් අරමුණු කරගනිමින් සංවිධානය කරන ලද දිස්ත්රික් මට්ටමේ වැඩසටහන් මාලාවේ දෙවැනි වැඩසටහන 2026 ජනවාරි 11 වන දින කළුතර දිස්ත්රික්කයේ මතුගම පිහිටි පුද්ගලික හෝටලයකදී පැවැත්වීය.
මෙහිදී, මලෛයහම් ජනතාවගේ ඉඩම් හා නිවාස අයිතිය සම්බන්ධයෙන් ජනතාවගේ අදහස් ගැඹුරින් සාකච්ඡා කළ අතර, කළුතර දිස්ත්රික්කයේ මලෛයහම් ජනතාව මුහුණ දෙන විශේෂිත ඉඩම් ගැටලු පිළිබඳවද අවධානය යොමු කරන ලදී. එමෙන්ම, දිස්ත්රික් මට්ටමින් සහ ජාතික මට්ටමින් ඉදිරියේදී ගත යුතු ක්රියාමාර්ග පිළිබඳවද විස්තරාත්මකව සාකච්ඡා කරන ලදී.
මෙම සාකච්ඡාව සඳහා මතුගම සහ පාලින්දනුවර ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශවලට අයත් වතුකර ප්රදේශවල නායක නායිකාවන් සහභාගී වූහ. සාකච්ඡාව අවසානයේදී, ඉදිරි මාස දෙක සඳහා ක්රියාත්මක කළ යුතු වැඩ සැලසුමක්ද සකස් කරගන්නා ලදී.
මෙම වැඩසටහන වතුකරයේ ජනතා හඬ සංවිධානයේ විධායක අධ්යක්ෂ ඇන්තනි ජේසුදාසන්, වැඩසටහන් සම්බන්ධිකාරිනී ලවීනා හසන්ති, ජාතික වැඩසටහන් සම්බන්ධිකාරක ෆ්රැන්සිස් රාජන් සහ කළුතර දිස්ත්රික් සම්බන්ධිකාරක කේ. යෝගසුජි යන මහත්ම මහත්මියන් විසින් මෙහෙයවනු ලැබීය.
மலையக மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளில் மிக முக்கியமானது நிலப் பிரச்சினையாகும். இதுவரை ஆட்சிக்கு வந்த எந்த அரசும் இந்த மக்களின் நிலப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை வழங்கவில்லை. தற்போதைய அரசும் இதற்கான தெளிவான மற்றும் செயல்திறன் கொண்ட திட்டமொன்றை முன்வைத்துள்ளதாக தெரியவில்லை.
இந்த பின்னணியில், மலையக மக்களின் நிலப் பிரச்சினை தொடர்பாக மக்களை அறிவூட்டுவதற்கும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் நோக்கமாகக் கொண்டு பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட மட்ட கலந்துரையாடல்களின் இரண்டாவது கலந்துரையாடல் 2026 ஜனவரி 11ஆம் தேதி களுத்துறை மாவட்டம், மத்துகமையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், மலையக மக்களின் நில மற்றும் வீட்டு உரிமைகள் குறித்த மக்களின் கருத்துகள் ஆழமாக விவாதிக்கப்பட்ட அதேவேளை களுத்துறை மாவட்டத்தில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் நிலப் பிரச்சினைகள் குறித்தும், எதிர்காலத்தில் மாவட்ட மற்றும் தேசிய மட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் மத்துகமை மற்றும் பாலிந்தனுவர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தலைவிகள் பங்கேற்றனர். கலந்துரையாடலின் முடிவில், அடுத்த இரண்டு மாதங்களுக்கான செயல் திட்டமும் தயாரிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலை பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் (VOPP) நிறைவேற்று இயக்குநர் அன்டனி ஜேசுதாஸன், திட்ட ஒருங்கிணைப்பாளர் லவீனா ஹசந்தி, தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ராஜன் மற்றும் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. யோகசுஜி ஆகியோர் வழிநடத்தினர்.

Leave a comment

This website uses cookies to improve your web experience.